×

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரம் சுங்கச்சாவடியை பொதுமக்கள் சூறையாடியதால் பரபரப்பு..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரம் சுங்கச்சாவடியை பொதுமக்கள் சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரம் என்ற பகுதியில் தேசிய நெடுஞ்சாலை சார்பில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல்லில் இருந்து கும்மி வரை நான்குவழி சாலையாக திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு வரை இருவழிச்சாலை மட்டுமே அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. 4 வழிச்சாலை பணிகள் முழுமையாக நிறைவு பெறாமல் சுங்கச்சாவடி செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு பல ஆண்டுகள் பொதுமக்கள், விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை சுங்கச்சாவடியை திறப்பதற்கு சுங்கச்சாவடி நிர்வாகம் ஏற்பாடுகளை செய்தது. இதற்கு அப்பகுதியிலுள்ள விவசாயிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இன்று காலை சரியாக 8 மணி அளவில் சுங்கச்சாவடி செயல்பாட்டிற்கு வரும் நிலையில் திடீரென சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. சுங்கச்சாவடியில் இருந்த அனைத்து உபகரணங்களும் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். பட்டினம்பட்டி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

The post திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரம் சுங்கச்சாவடியை பொதுமக்கள் சூறையாடியதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Lakshmipuram ,Watalakundu ,Dindigul district ,Dindigul ,post ,Kummi ,Lakshmipuram Customs Road ,Dinakaran ,
× RELATED பொங்கல் பண்டிகையையொட்டி விற்பனைக்காக...