×

கச்சிராயபாளையம் அருகே பைக் மீது தனியார் பேருந்து மோதி கணவர் கண்முன்னே மனைவி பலி

 

சின்னசேலம், மார்ச் 12: கச்சிரபாளையம் அருகே பைக் மீது தனியார் பஸ் மோதியதில் கணவன் கண்முன்னே மனைவி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து தொடர்பாக பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் அருகே மாத்தூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்தவர் மணிபாரதி(36). இவருடைய மனைவி பிரேமா (27). இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர். மணிபாரதி கடந்த சில ஆண்டுகளாக கச்சிராயபாளையம் கோமுகி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்துவருகிறார்.

இந்நிலையில் மணிபாரதி தனது மனைவி பிரேமாவுடன் பைக்கில் நேற்று காலை மாத்தூரில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி சென்றுள்ளார்.  ஏர்வாய்பட்டிணம் பஸ் நிறுத்தம் அருகே சாலையின் இடது ஓரமாக சென்றபோது அவர்களுக்கு பின்னால் கச்சிராயபாளையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து பைக்கின் மீது மோதியுள்ளது. இதில் நிலைதடுமாறி மணிபாரதியும் அவரது மனைவியும் கீழே விழுந்துள்ளனர். அப்போது மணிபாரதியின் மனைவி பிரேமாவின் தலையில் பேருந்தின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஆனால், மணிபாரதி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். கண் முன்னே மனைவி இறந்ததை கண்டு கதறி அழுதார். தகவல் அறிந்ததும் கச்சிரபாளையம் போலீசார் சென்று பிரேமாவின் உடலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயம் பட்ட மணிபாரதி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து மணிபாரதி அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் தனியார் பேருந்து ஓட்டுநர் சகாயம்(30) என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கச்சிராயபாளையம் அருகே பைக் மீது தனியார் பேருந்து மோதி கணவர் கண்முன்னே மனைவி பலி appeared first on Dinakaran.

Tags : Kachirayapalayam ,Chinnasalem ,Mathur ,Kallakurichi district… ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி