திருவாரூர், மார்ச் 12: திருவாரூர் மாவட்டத்திலுள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் ஊராட்சி விளையாட்டு மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சிகளில் உள்ள விளையாட்டு மைதானங்களில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் விளையாட்டில் ஆர்வமுடைய அனைவரும் பயன்பெறும் விதமாக கிராம ஊராட்சியில் உள்ள ஊராட்சி விளையாட்டு மன்றத்தில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்துகொள்ளவும், அந்தந்த ஊராட்சியில் உள்ள விளையாட்டு உபகரணங்களை பயன்படுத்தி அவரவரின் விளையாட்டு திறமைகளை மேம்படுத்திக் கொள்ளவும் கேட்டுக்கொள்வதுடன் இதுதொடர்பாக அந்தந்த கிராம ஊராட்சி செயலர்களை தொடர்புகொள்ளலாம்.இந்த தகவலை கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார்.
The post விளையாட்டு மன்றத்தில் வீரர்கள் உறுப்பினர்களாக பதிவு செய்யலாம் appeared first on Dinakaran.