×

அறந்தாங்கி வருவாய் கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

 

அறந்தாங்கி, மார்ச்12: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்க்கு அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமார் தலைமை வகித்தார்.

கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு வருவாய்துறை, ஊரக வளர்ச்சித் துறை,வேளாண்மை துறை தோட்டக்கலை துறை மின்வாரிய துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளுக்கு பதில் அளித்தனர். கூட்டத்தில் தனி வட்டாட்சியர்கள் ஜபரூல்லா, பாலகிருஷ்ணன் மற்றும், கல்லன்னை கால்வாய் பாசன ஒருங்கிணைப்பு குழு சங்க தலைவர் கொக்குமடை ரமேஷ் உள்ளிட்ட அனைத்து விவசாயிகளும் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post அறந்தாங்கி வருவாய் கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Aranthangi Revenue Division ,Grievance Redressal ,Aranthangi ,Pudukottai district ,Farmers Grievance Redressal Day Meeting ,Taluk Office ,Revenue ,Divisional Commissioner ,Sivakumar ,Farmers Grievance Redressal Meeting ,Revenue Department ,Rural Development… ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி