×

சாலையோரங்கள், வேளாண் நிலங்களில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை

 

கரூர், மார்ச் 12: கரூர் மாநகராட்சி மற்றும் மாவட்ட பகுதிகளில் கிராம பகுதிகளையும், விவசாய நிலங்களை ஒட்டியும் டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன. இதில், பல கடைகளில் பார்கள் செயல்படுவதில்லை. இதனால், குடிமகன்கள் சாலையோரமோ அல்லது விவசாய நிலங்களில் அமர்ந்து குடித்து விட்டு, பிளாஸ்டிக் கப், பாட்டில் போன்றவற்றை தூக்கி எறிந்துவிட்டுச் செல்கின்றனர்.இதனால், மண்ணில் புதையும் பிளாஸ்டிக் பொருட்கள் நீண்ட காலம் மண்ணில் மட்காமல் கிடந்து.

வேளாண் தொழிலுக்கு இடையூறாகவும், மண்ணில் உள்ள இயற்கை பாக்டீரியாக்களுக்கு பாதிப்பையும் எற்படுத்துகின்றன. இதனால், மண்ணின் வளம் பாதித்து, உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சாலையோரங்கள், வேளாண் நிலங்கள் உள்ளிட்ட திறந்த வெளியில் மதுஅருந்துவதைத் தடுக்க, உரிய சட்டத்தை தீவிரமாக அமல்படுத்திட காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post சாலையோரங்கள், வேளாண் நிலங்களில் மது அருந்துவோர் மீது நடவடிக்கை: விவசாயிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Karur ,Tasmac ,Karur Corporation ,Dinakaran ,
× RELATED கரூர் மாநகராட்சியில் தெருக்களில்...