உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. உளுந்தூர்பேட்டை அருகே பாலி கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை காவலர் காசிலிங்கம் (70) மற்றும் களமருதூர் கிராமத்தை சேர்ந்த ராமர் (65), இவரது பேரன் சூர்யா (25) ஆகிய 3 பேரும் நேற்று 2 இருசக்கர வாகனத்தில் திருச்சி ரோட்டில் இருந்து உளுந்தூர்பேட்டை சென்று கொண்டிருந்தனர்.
அரசு தொழிற்பயிற்சி நிலையம் அருகே சென்றபோது பலத்த மழையின் காரணமாக வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு புளிய மரத்தின் கீழ் 3 பேரும் மழைக்கு ஒதுங்கி நின்றிருந்தனர். அப்போது திடீரென மின்னல் தாக்கியதில் காசிலிங்கம் மற்றும் ராமர் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து உயிரிழந்தனர். படுகாயத்துடன் கிடந்த சூர்யா உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
The post மின்னல் தாக்கி ஓய்வு பெற்ற ஏட்டு உள்பட 2 பேர் பலி appeared first on Dinakaran.