×

மேட்டூர் அணை நீர்மட்டம் 109 அடியானது

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது. ஒகேனக்கல் காவிரியில் 2வது நாளாக நேற்று, 500 கனஅடியாக நீர்வரத்து நீடிக்கிறது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 251 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 170 கன அடியாக சரிந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக, விநாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் 109.15 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று காலை 109.07 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 77.10 டிஎம்சியாக உள்ளது.

The post மேட்டூர் அணை நீர்மட்டம் 109 அடியானது appeared first on Dinakaran.

Tags : Matur Dam ,Matur ,Kaviri Reservoir ,Okanakal ,Matur dams ,Okanakal Caviri ,Mattur Dam 251 ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 424 கன அடியாக அதிகரிப்பு!