- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமைச்சர்
- பொன்முடி
- விழுப்புரம்
- விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி
- அமைச்சர் பொன்னம்புடி
விழுப்புரம்: தமிழகத்தில் வேலைவாய்ப்புகளில் தமிழ் மொழியில் படித்தவர்களுக்குதான் முன்னுரிமை என்றும் மும்மொழி தேவையற்றது என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார். விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம், தொகுதி மறு சீரமைப்பில் அநீதி என தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் விழுப்புரம் அருகே பிடாகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது: நமக்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் போதாதா. ஆனால் ஒன்றிய அரசு 3வதாக இந்தி மொழி கற்க வேண்டும் என்கிறார்கள். இரு மொழி போதும் என தமிழக அரசு தெரிவித்து வருகிறது. தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு தமிழகத்தில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
எந்த மொழியை வேண்டுமானாலும் கற்கலாம். ஆனால் கட்டாய பாடமாக்கக்கூடாது. இந்திக்கு நாங்கள் எதிரி கிடையாது. ஆனால் ஒரு மொழியை திணிக்கக்கூடாது. இரு மொழி படித்தாலே எல்லாவிதமான சலுகைகளும் கிடைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
The post தமிழகத்தில் மும்மொழி தேவையற்றது தமிழில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை: அமைச்சர் பொன்முடி திட்டவட்டம் appeared first on Dinakaran.