×

ஐபிஎல் போட்டிகளின் போது மது, புகையிலை விளம்பரங்களுக்கு தடை விதிப்புக்கு பாமக வரவேற்பு: அன்புமணி டிவிட்

சென்னை: ஐ.பி.எல் போட்டிகளின் போது மது, புகையிலை மறைமுக விளம்பரங்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் வரும் 22ம் தேதி தொடங்கவுள்ள ஐ.பி.எல் போட்டிகளின் போது விளையாட்டு அரங்குகளிலும், தொலைக்காட்சி ஒளிபரப்புகளின் போதும் மது மற்றும் புகையிலை தொடர்பான விளம்பரங்களைக் கூட அனுமதிக்கக் கூடாது என்று ஐ.பி.எல் நிர்வாகத்திற்கு ஒன்றிய அரசு ஆணையிட்டுள்ளது.

இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இது தொடர்பாக ஐ.பி.எல் அமைப்புக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குனர் அருண்சிங் துமால் எழுதியுள்ள கடிதத்தில்,’இளைஞர்களுக்கு கிரிக்கெட் வீரர்கள் முன்னுதாரணமாக திகழ்வதால் ஒன்றிய அரசின் சுகாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதிலும் ஐ.பி.எல் அமைப்புக்கு சமூக, தார்மீகக் கடமை உள்ளது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை மிகவும் சரியானது ஆகும். ஒன்றிய அரசின் ஆணையை ஐபிஎல் அமைப்பு உறுதியாக பின்பற்ற வேண்டும். சென்னை உள்பட ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் விளையாட்டு அரங்குகள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்புகளின் போது மது மற்றும் புகையிலை தொடர்பான விளம்பரங்களை ஐபிஎல் அமைப்பு தடை செய்ய வேண்டும்.
இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.

The post ஐபிஎல் போட்டிகளின் போது மது, புகையிலை விளம்பரங்களுக்கு தடை விதிப்புக்கு பாமக வரவேற்பு: அன்புமணி டிவிட் appeared first on Dinakaran.

Tags : PMK ,IPL matches ,Anbumani ,Chennai ,Union government ,IPL ,India ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?