×

ஹோலி பண்டிகை நாடாளுமன்றத்திற்கு நாளை விடுமுறை

புதுடெல்லி: ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஹோலி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாடாளுமன்ற இரு அவைகளின் அலுவல் ஆய்வுக்குழு எடுத்த முடிவின்படி, ஹோலி பண்டிகைக்கு முந்தைய நாளான மார்ச் 13ம் தேதி மக்களவை மற்றும் மாநிலங்களவை செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹோலி பண்டிகை தினமான மார்ச் 14ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை விடுமுறை அறிவிப்பை ஈடுகட்ட மார்ச் 29ம் தேதி சனிக்கிழமையன்று அவையை நடத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

The post ஹோலி பண்டிகை நாடாளுமன்றத்திற்கு நாளை விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Holi festival ,Parliament ,New Delhi ,Houses of Parliament ,Business Study Committee ,Holi festival… ,
× RELATED எஸ்ஐஆர் கணக்கெடுப்பு விவகாரம்; 82 வயது...