×

மக்கள் வரிபணத்தில் விளம்பர பலகைகள் கெஜ்ரிவால் மீது வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: டெல்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவால், அப்போதைய மதியாலா ஆம் ஆத்மி எம்எல்ஏ குலாப் சிங் மற்றும் துவாரகா ஏ வார்டு கவுன்சிலர் நிதிகா சர்மா ஆகியோருக்கு எதிராக கடந்த 2019ம் ஆண்டு புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில் மூன்று பேரும் பெரிய அளவிலான விளம்பர பலகைகளை வைத்து பொதுமக்களின் பணத்தை வேண்டுமென்றே துஷ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான புகார் மனு அனுமதிக்கப்பட தகுதியானது என்றும் இது தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்யும்படியும் டெல்லி போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

The post மக்கள் வரிபணத்தில் விளம்பர பலகைகள் கெஜ்ரிவால் மீது வழக்கு பதிய நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kejriwal ,NEW DELHI ,MINISTER ,DELHI ,MADHYALA ,DUWARKA ,NIDIKA SHARMA ,Dinakaran ,
× RELATED 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு...