×

விமானநிலையத்தில் சலுகைகள் பயன்படுத்தினாரா? நடிகை ரன்யாராவிடம் விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி நியமனம்: கர்நாடக அரசு உத்தரவு

பெங்களூரு: தங்கம் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள நடிகை ரன்யா ராவிடம் விசாரணை நடத்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி கவுரவ் குப்தாவை கர்நாடக மாநில அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது. துபாயிலிருந்து பெங்களூருவுக்கு தங்கம் கடத்தி வந்ததாக நடிகை ரன்யாராவை பொருளாதார புலனாய்வு துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் 14 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவரது வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.12 கோடிக்கு மேல் சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் கர்நாடக மாநில வீட்டுவசதி வாரியத்துறை டிஜிபி ராமசந்திர ராவின் மகளான ரன்யா ராவ், தனது தந்தை பெயரை பயன்படுத்தி விமான நிலையத்தில் சோதனைகளை தவிர்கும் மரியாதை சலுகைகளை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியானது. இது குறித்து ரன்யா ராவ் மற்றும் டிஜிபி ராமசந்திர ராவ் உள்பட போலீசாரிடம் விசாரணை நடத்தி ஒரு வாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரி கவுரவ் குப்தாவை கர்நாடக மாநில அரசு நியமித்து உத்தரவிட்டுள்ளது.

* மேலும் ஒருவர் கைது
தங்க கடத்தல் தொடர்பாக ரன்யா ராவ் தொடர்புடைய மற்றொரு சந்தேக நபரான தருண் ராஜு என்பரை கைது போலீசார் கைது செய்துள்ளனர். பெங்களூரு ஓட்டல் உரிமையாளர்களுடன் தொடர்புடைய தருண் ராஜுக்கும், தங்கம் கடத்தலுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. இதுதொடர்பான தொலைபேசி அழைப்புகள் உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இந்த கடத்தலில் மேலும் பலர் சிக்குவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

* ரன்யாராவ் வீட்டில் சிபிஐ சோதனை
தங்க கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள நடிகை ரன்யா ராவ் வீட்டில் டெல்லி சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பின்னர் அவரது திருமணம் நடைபெற்ற ஓட்டல் மற்றும் கர்நாடக தொழில்துறை வாரிய அலுவலகங்களில் சோதனை நடத்தினர். தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ரன்யா ராவுக்கும், அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் உள்ள தொடர்புகள் குறித்த ஆதாரங்களை சேகரிப்பதன் ஒரு பகுதியாக, அவரது திருமண விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்கள் பெறப்பட்ட விலையுயர்ந்த பரிசுகள் மற்றும் திருமண காட்சிகள் மற்றும் விருந்தினர் பட்டியல்கள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.

The post விமானநிலையத்தில் சலுகைகள் பயன்படுத்தினாரா? நடிகை ரன்யாராவிடம் விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி நியமனம்: கர்நாடக அரசு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : IAS ,Ranya Rao ,Karnataka government ,Bengaluru ,Karnataka state government ,officer ,Gaurav Gupta ,Economic Investigation Department ,Dubai ,Bengaluru… ,Dinakaran ,
× RELATED தங்கக் கடத்தல்: நடிகை ரன்யா ராவுக்கு ஜாமின் வழங்க கர்நாடக ஐகோர்ட் மறுப்பு