×

கொடைக்கானல் பல்கலை.யில் உலக மகளிர் தின விழா

கொடைக்கானல், மார்ச் 12: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் மகளிர் துறை சார்பில் உலக மகளிர் தின விழா நடந்தது. துணைவேந்தர் கலா தலைமை வகித்தார். பேராசிரியர் ஜெயப்பிரியா வரவேற்றார். பதிவாளர் ஷீலா, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிளாரா தேன்மொழி முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் மகளிர் தினத்தின் சிறப்புகள், நாட்டின் முன்னேற்றத்தில் பெண்களின் பங்கு, பெண் கல்வியின் அவசியம், சமூதாய வளர்ச்சியில் பெண்களின் கடமை குறித்து விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து பெண்கள் அனைத்து தடைகளை தாண்டியும் சாதிக்க வேண்டும் என எடுத்துரைத்தனர். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மகளிர் துறை தலைவர் மீனா பிரியதர்ஷினி ஜெயப்பிரியா செய்திருந்தனர். குங்குமாதேவி நன்றி கூறினார்.

The post கொடைக்கானல் பல்கலை.யில் உலக மகளிர் தின விழா appeared first on Dinakaran.

Tags : World Women's Day ,Kodaikanal University ,Kodaikanal ,Women's Department ,Kodaikanal Mother Teresa Women's University ,Vice-Chancellor ,Kala ,Jayapriya ,Sheela ,Clara Thenmozhi… ,Dinakaran ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை