×

பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு

திருப்புவனம், மார்ச் 12: திருப்புவனம் அருகே எண்ணூரிலிருந்து தூத்துக்குடி சுமார் 534 கிமீ தொலைவுக்கு இயற்கை வாயு பைப் லைன் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் கொண்டு செல்கிறது. திருப்புவனம் அருகே செல்லப்பனேந்தல் வழியாக இந்த பைப் லைன் செல்கிறது. பைப் லைனில் வாய்க்கசிவு ஏற்பட்டால், அதை நிறுத்துவது குறித்தும், தகவல் தெரிவிப்பது குறித்து மானாமதுரை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் பேரிடர் விழிப்புணர்வு செயல்முறை விளக்கம் அளித்தனர். இந்தியன் ஆயில் நிறுவன மதுரை மண்டல மேலாளர் மணிலா, மேலாளர் சுந்தர், திருப்புவனம் தாசில்தார் விஜயகுமார், முன்னாள் ஊராட்சி தலைவர் மனோன்மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Thiruppuvanam ,Indian Oil Corporation ,Ennore ,Thoothukudi ,Chellappanenthal ,Dinakaran ,
× RELATED திருப்புவனம் அருகே டீசல் லாரி – அரசு பஸ் மோதி 21 பேர் படுகாயம்