×

கஞ்சா விற்ற இருவர் கைது

மதுரை, மார்ச் 12: மதுரை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சிறப்பு எஸ்ஐக்கள் முத்துமணி, நாகராஜன் ஆகியோர் தலைமையிலான போலீசார் குலமங்கலம் கண்மாய்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்த எஸ்.ஆலங்குளம் சர்தார் மகன் சல்மான்(26) மற்றும் பாண்டி மகன் ராஜா(26) ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பறிமுதல்
செய்து விசாரித்து வருகின்றனர்.

The post கஞ்சா விற்ற இருவர் கைது appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Prohibition Enforcement Division ,Special ,SIs ,Muthumani ,Nagarajan ,Kanmaikarai ,Kulamangalam ,Salman ,S. Alankulam Sardar ,Pandi… ,
× RELATED காலியிடங்களை விரைந்து நிரப்ப...