- கோவில்பட்டி யூனியன்
- கோவில்பட்டி
- மக்கள் சங்கம்
- லுபாயுரணி மக்கள் ஒன்றியம்
- கோவில்பட்டி வட்டம்
- தியாகிகள்
- லீலாவதி நகர்
- இலுப்பயுரணி
- உத்தரமான்
- தின மலர்
கோவில்பட்டி, மார்ச் 12: அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி இலுப்பையூரணி ஊராட்சி மக்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கோவில்பட்டி வட்டம் இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட தியாகி லீலாவதி நகர் குடியிருப்போர் நலச்சங்க தலைவர் உத்தண்டராமன் தலைமையில் அப்பகுதிமக்கள், நேற்று திரண்டு வந்து யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள், தியாகி லீலாவதி நகரில் அடிப்படை தேவைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி கோஷமிட்டனர்.
பின்னர் அவர்கள், யூனியன் அலுவலக மேலாளர் மணிகண்டராஜாவிடம் வழங்கிய மனுவில், இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட எஸ்எஸ்டிஎம் கல்லூரியின் பின்புறம் தியாகி லீலாவதி நகருக்கு அத்தியாவசிய தேவைகள் செய்து தர வலியுறுத்தி பலமுறை மனுக்கள் அளித்தும், போராட்டங்கள் நடத்தியும், தாசில்தார் முன்னிலையில் சமாதான கூட்டம் நடைபெற்றும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது மழை பெய்து வருவதால், தியாகி லீலாவதி நகரில் மழைநீர் தேங்கி, சேறும், சகதியுமாக காணப்படுகிறது. எனவே சாலை, குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை உடனடியாக செய்து தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.
The post கோவில்பட்டி யூனியனை கிராம மக்கள் முற்றுகை appeared first on Dinakaran.