×

பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா

ராசிபுரம், மார்ச் 12: ராசிபுரம் அருகே குருசாமிபாளையம் தோப்புக்காட்டில், லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இக்கோயிலில் புதியதாக விநாயகர், லட்சுமி நரசிம்மர், லட்சுமி ஹயக்ரீவர், கருடாழ்வார், ஆஞ்சநேயர், புதிய பரிவார மூர்த்திகள், நவகிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில், சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து, லட்சுமி நாராயண சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

The post பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Tags : Perumal Temple Kumbabhishekam Ceremony ,Rasipuram ,Kumbabhishekam ,Lakshmi Narayana Perumal Temple ,Gurusamipalayam grove ,Lord Vinayagar ,Lakshmi Narasimha ,Lakshmi Hayagrivar ,Garudazhvar ,Anjaneyar ,Parivar ,Navagrahas ,
× RELATED திருவாலங்காடு அருகே கந்தசாமி கோயில் கும்பாபிஷேக விழா