×

அனுமதியின்றி எருதாட்டம் நடத்திய 4 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி, மார்ச் 12: பர்கூர் அடுத்துள்ள பட்டளப்பள்ளி கொங்கன்செருவு மாரியம்மன் கோயில் அருகே, கடந்த 2 நாட்களுக்கு முன் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி எருது விடும் விழா நடந்தது. இதுபற்றி தகவலறிந்த பட்டளப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் மரகதம், பர்கூர் போலீசில் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, எருது விடும் விழாவை ஒருங்கிணைத்த அதே பகுதியை சேர்ந்த குப்புசாமி(51), மாதப்பன்(48), சம்பத்(45), சுரேஷ்(45) ஆகிய 4பேர் மீது வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

The post அனுமதியின்றி எருதாட்டம் நடத்திய 4 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Konkancheruvu Mariamman Temple ,Pattalapally ,Barkur ,Village Administrative Officer ,Maragatham ,Dinakaran ,
× RELATED 83 ஆண்டு கால கோரிக்கை கிருஷ்ணகிரி ரயில் பாதை திட்டம் நிறைவேறுவது எப்போது?