புழல்: புழல் அடுத்த புத்தகரம், காமராஜ் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் உலகநாதன் (62). இவர் அப்பகுதியில் கேட்டரிங் தொழில் செய்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளி மாணவியிடம் பாலியல் துன்புறுத்துதலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் புழல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த அக்டோபர் மாதம் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் பிரசித் தீபா வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளி உலகநாதனை வலைவீசி தேடிவந்தார். இந்நிலையில் நேற்று காலை புத்தகரம் பகுதியில் சுற்றித் திரிந்த அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்து, விசாரணை மேற்கொண்டனர். அவர் மீது போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் முதியவர் கைது appeared first on Dinakaran.
