- மாநில வர்த்தக குழு
- காஞ்சிபுரம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- காசி முத்து மானிக்கம்
- திமுக மாநில வர்த்தக அணி
- காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்
- திமுக மாநில வர்த்தக…
- தின மலர்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, திமுக மாநில வர்த்தக அணி சார்பில் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாநில வர்த்தக அணி செயலாளர் காசி முத்து மாணிக்கம் வழங்கினார். காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக மாநில வர்த்தக அணி சார்பில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாளையொட்டி, மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, காஞ்சிபுரம் நடுத்தெரு தாலுகா அலுவலகம் அருகே நேற்று முன்தினம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தலைமை தாங்கினார். வர்த்தக அணி மாநில துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்து, வரவேற்று பேசினார். பகுதி செயலாளர் திலகர், வர்த்தக அணி நிர்வாகிகள் ஓ.எஸ்.தினகரன், ரவிச்சந்திரன், வட்ட செயலாளர் மண்டி சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சிறப்பு விருந்தினராக மாநில வர்த்தக அணி செயலாளர் காசி முத்து மாணிக்கம் பங்கேற்று சிறப்புரையாற்றினார். பின்னர், பெண்களுக்கு தையல் மெஷின், செல்போன், வேட்டி சேலைகள், அரிசி, மூடி திருத்த பயன்படுத்தும் சேர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முடிவில், 18வது மாநகராட்சி கவுன்சிலர் மல்லிகா ராமகிருஷ்ணன், வர்த்தக அணி மாவட்ட துணை தலைவர் சாட்சி சண்முகசுந்தரம் ஆகியோர் நன்றி கூறினர்.
இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட பொருளாளர் சன் பிராண்ட ஆறுமுகம், மாநகர செயலாளர் தமிழ்ச்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், பொதுக்குழு உறுப்பினர் சிகாமணி, தொமுச பேரவை சுந்தரவரதன், பகுதி செயலாளர் தசரதன், வெங்கடேசன், திலகர், மாநகர நிர்வாகிகள் செங்குட்டுவன், முத்துசெல்வம், ஜெகநாதன், பொருளாளர் சுப்பராயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
The post முதல்வர் பிறந்தநாளையொட்டி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள்: மாநில வர்த்தக அணி செயலாளர் வழங்கினார் appeared first on Dinakaran.