- ஜனாதிபதி ஜெலென்ஸ்கி
- எங்களுக்கு
- மாநில செயலாளர்
- ஜெட்டாவில்
- உக்ரைன்
- ரஷ்யா
- ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்
- ஜனாதிபதி
- ஜெலென்ஸ்கி
- அமெரிக்கா.…
- தின மலர்
ஜெட்டா: உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த மூன்றாண்டுகளை கடந்தும் போர் நீடித்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறார். கடந்த மாதம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றார். அப்போது வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோருடன் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின்போது அமெரிக்க துணை அதிபர் கேட்ட கேள்வியால் ஆத்திரமடைந்த ஜெலன்ஸ்கி, கனிமவள ஒப்பந்தத்துக்கு மறுப்பு தெரிவித்ததுடன், உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம் குறித்த அமைதிப்பேச்சுவார்த்தையிலும் பங்கேற்காமல் வௌியேறினார்.
ஜெலன்ஸ்கியின் செயலால் எரிச்சலடைந்த டிரம்ப் உக்ரைனுக்கான ராணுவ, நிதி உதவிகளை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டார். இந்த உத்தரவால் உக்ரைனின் ராணுவ பலம் குறைந்து ரஷ்யாவை எதிர்ப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. அமெரிக்காவின் உதவியின்றி ரஷ்யாவை எதிர்க்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனிமவள ஒப்பந்தம், ரஷ்யாவுடனான போர் நிறுத்தம் பற்றி அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒத்து கொண்டுள்ளார். இதனிடையே ரஷ்யாவின் 10 இடங்களை குறி வைத்து உக்ரைன் ராணுவம் நேற்று முன்தினம் நள்ளிரவு 337 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியது.
அந்த டிரோன்களை ரஷ்ய ராணுவம் சுட்டு வீழ்த்தியது. இந்த பரபரப்பான சூழலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சவுதி அரேபியா புறப்பட்டு சென்றுள்ளார். இதேபோல் அமெரிக்க வௌியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோவும் சவுதி அரேபியா சென்றார். சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க வௌியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் அதிகாரிகள் சந்தித்து உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தம், உக்ரைன் கனிமவளங்களை அமெரிக்காவுக்கு தருவது உள்ளிட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
The post போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க வௌியுறவுத்துறை செயலாளருடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.