×

கல்வியில் அரசியல் கூடாது; கவர்னர், துணைவேந்தர்கள் நியமன சர்ச்சைகளை தவிர்க்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு தேவகவுடா அறிவுரை

புதுடெல்லி: மாநிலங்களவையில் கல்வி அமைச்சகத்தின் செயல்பாடுகள் குறித்த விவாதத்தில் பங்கேற்று பேசிய தேவகவுடா, துணைவேந்தர் நியமனம் குறித்து எந்த சர்ச்சையும் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுப்பது ஒன்றிய, மாநில அரசுகளின் பொறுப்பு. கர்நாடகாவுக்காக நான் குரல் எழுப்பவில்லை. மாறாக பல மாநிலங்களில் கவர்னர் நியமனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோன்ற சர்ச்சைகள் தொடரக்கூடாது. கல்வி தொடர்பான பிரச்னையில் நான் கல்வி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வருவது என்னவென்றால் இந்த சர்ச்சையை தீர்க்க ஏதாவது தீர்வு காண வேண்டும் என்று உங்கள் நல்ல உள்ளத்தை மட்டுமே கேட்டுக்கொள்கிறேன். கல்வி விவகாரத்தில் அரசியல் கலக்காமல் கணிசமான மானியங்கள் வழங்கப்பட வேண்டும்’ என்றார்.

The post கல்வியில் அரசியல் கூடாது; கவர்னர், துணைவேந்தர்கள் நியமன சர்ச்சைகளை தவிர்க்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு தேவகவுடா அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Deve Gowda ,Union Government ,New Delhi ,Rajya Sabha ,Education Ministry ,Union ,Karnataka ,Dinakaran ,
× RELATED புதிய சட்ட திருத்தத்துக்கு எதிரான...