- சென்னை உயர் நீதிமன்றம்
- சென்னை
- பரத்
- மகா மாரியம்மன் கோயில் திருவிழா
- ஜமீன் இளம்பிள்ளை
- பரமத்தி வேலூர்
- நாமக்கல்
சென்னை : “கோயில் திருவிழாக்களில் பங்கேற்க ஒவ்வொரு பிரிவினருக்கும் உரிமை உள்ளது” என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரை அடுத்த ஜமீன் இளம்பிள்ளை என்னுமிடத்தில் உள்ளா மகாமாரியம்மன் கோவில் மாசி திருவிழா நடத்தக் கோரி பாரத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார், இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, ஆண்டுதோறும் அமைதிப் பேச்சு நடத்தப்பட்டு திருவிழா நடத்தப்படுவதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவில், “ஒவ்வொரு ஆண்டும் அமைதிப் பேச்சு நடத்த வேண்டிய அவசியமில்லை. கடவுள் முன் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது. தங்கள் தலைமையில் தான் கோவில் திருவிழா நடத்தப்பட வேண்டும் என எந்த சாதியினரும் உரிமை கோர முடியாது.கோயில் திருவிழாக்களில் பங்கேற்க ஒவ்வொரு பிரிவினருக்கும் உரிமை உள்ளது.எந்த பிரிவினருக்கும் முன்னுரிமை வழங்காமல் திருவிழாவை நடத்த வேண்டும். அறநிலையத் துறை அதிகாரிகள் திருவிழாவை நடத்த வேண்டும்,” இவ்வாறு தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.
The post “கோயில் திருவிழாக்களில் பங்கேற்க ஒவ்வொரு பிரிவினருக்கும் உரிமை உள்ளது” : சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.