- சென்னை
- உயர் நீதிமன்றம்
- ராஜகோபுரம்
- ரத்தின விநாயகர்
- துர்க்கை அம்மன் கோவில்
- ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலை
- தின மலர்
சென்னை: மெட்ரோ ரயில் நிலையத்துக்காக இன்சூரன்ஸ் நிறுவன நிலத்தை கையகப்படுத்துவது பற்றிய நோட்டீசை ஐகோர்ட் ரத்து செய்து. ராயப்பேட்டை ஒயிட்ஸ் சாலை ரத்தின விநாயகர், துர்க்கை அம்மன் கோயில் ராஜ கோபுரத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடரப்பட்டது. ஆலயம் காப்போம் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன 837 ச.மீ. நிலத்தை கையகப்படுத்தல் பற்றி விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது; ஏற்கனவே முன் அனுமதி பெற்று ரூ.200 கோடியில் இன்சூரன்ஸ் நிறுவனம் கட்டுமானங்கள் மேற்கொண்டுள்ளது என தெரிவித்த நீதிபதி, பாதுகாப்பு, வசதி மற்றும் தொழில்நுட்ப காரணங்களுக்காக மெட்ரோ ரயில் நிலைய திட்டத்தில் மாற்றம் செய்யப்படவில்லை. பழையபடி கோவில் முன் மெட்ரோ ரயில் நிலையம் அமைத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்
The post இன்சூரன்ஸ் நிறுவன நிலம் எடுப்பு நோட்டீஸ் ரத்து appeared first on Dinakaran.