×

“எம்.பி.க்களுக்கான தொகுதி நிதியை ரூ.18 கோடியாக உயர்த்துக” – சுப்பராயன் எம்.பி.

டெல்லி: நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.18 கோடியாக உயர்த்த வேண்டும் என திருப்பூர் எம்.பி. சுப்பராயன் வலியுறுத்தியுள்ளார். 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மக்களவை தொகுதி மேம்பாட்டுக்கு ரூ.5 கோடியை மட்டுமே ஒன்றிய அரசு வழங்குகிறது. ஆனால் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ரூ.3 கோடி மேம்பாட்டு நிதியாக தமிழ்நாடு அரசு வழங்குகிறது. தமிழ்நாட்டை குறி வைத்து அடிக்கும் பாஜக ஆட்சியாளர்கள், தொகுதி மேம்பாட்டு நிதியை ஏன் உயர்த்தவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.

The post “எம்.பி.க்களுக்கான தொகுதி நிதியை ரூ.18 கோடியாக உயர்த்துக” – சுப்பராயன் எம்.பி. appeared first on Dinakaran.

Tags : Subbarayan ,Delhi ,Tiruppur ,Union government ,Lok Sabha ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் பொங்கல் உதவி தொகையாக ரூ.3000 வழங்க துணை நிலை ஆளுநர் உத்தரவு..!!