×

கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் “கிரிமினல்”

பர்சா பிக்சர்ஸ் பி.ஆர்.மீனாட்சி சுந்தரம், பிக் பிரின்ட் பிக்சர்ஸ் ஐ.பி.கார்த்திகேயன் இணைந்து வழங்க, கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘கிரிமினல்’. முக்கிய வேடத்தில் சரத்குமார் நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து டப்பிங் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. தட்சிணாமூர்த்தி ராம்குமார் எழுதி இயக்கியுள்ளார்.

பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். சினேகன் பாடல்கள் எழுதியுள்ளார். மதுரை மாநகரை பின்னணியாக வைத்து, முழுநீள கிரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது. கவுதம் கார்த்திக் குற்றவாளியாகவும், சரத்குமார் காவல்துறை அதிகாரியாகவும் நடித்துள்ளனர். ஜனனி, தீப்தி, ரவீணா ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

The post கவுதம் கார்த்திக் ஹீரோவாக நடிக்கும் “கிரிமினல்” appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Gautham Karthik ,Barsa Pictures ,Meenakshi Sundaram ,Big Print Pictures ,Karthikeyan ,Sarath Kumar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மத ரீதியான பதிவு; போலீசார் வழக்கு