×

தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவை திரும்பப்பெற்றார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி!!

சென்னை: தயாநிதிமாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற மனுவை எடப்பாடி பழனிசாமி வாபஸ் பெற்றார். சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை எடப்பாடி பழனிசாமி திரும்ப பெற்றுக் கொண்டார். தொகுதி மேம்பாட்டு நிதியை தயாநிதி மாறன் முறையாக செலவிடவில்லை என நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது பழனிசாமி பிரச்சாரம் செய்தார். எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு மறுப்பு தெரிவித்த தயாநிதி மாறன், அவருக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

உண்மைக்கு மாறாகவும், தன் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் தவறான குற்றச்சாட்டை பழனிசாமி கூறியதாக தயாநிதி மாறன் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏக்கள். மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஜெயவேல் முன்பு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி பழனிசாமி மனு தாக்கல் செய்தார்.

அதற்கு விடுவிக்க கோரிய மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என வழக்கு எண்ணிட கூடாது. எனவே இந்த மனுவை ஏற்க கூடாது என தயாநிதி மாறன் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணை வந்தபோது எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விடுவிக்கக் கூடிய மனுவை திரும்ப பெறுவதாக தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை அடுத்த மாதம் ஒன்பதாம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

The post தயாநிதி மாறன் தொடர்ந்த அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவை திரும்பப்பெற்றார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி!! appeared first on Dinakaran.

Tags : EDAPPADI PALANISAMI ,GENERAL SECRETARY OF STATE ,DAYANITHI MARAN ,Chennai ,CHENNAI SPECIAL COURT ,Dayaniti Maran ,General Secretary ,Dinakaran ,
× RELATED டிடிவி தினகரனுக்கு எதிரான வழக்கை திரும்ப பெற்றார் எடப்பாடி பழனிசாமி