×

கிராம மக்கள் மனு முறையாக பட்டா வழங்க வேண்டும்

திருச்சி, மார்ச் 11: முறையாக பட்டா வழங்க வேண்டும் என்று வேங்கைகுறிச்சி, மாராட்சி ரெட்டியப்பட்டி கிராம மக்கள் மனு அளித்தனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை வேங்கைகுறிச்சி, மாராட்சி ரெட்டியபட்டி கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் முகாமில் மனு அளித்தனர்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது: எங்கள் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக, குடியிருந்து வருகிறோம். இந்நிலையில் கடந்த 2000ம் ஆண்டு மறைந்த முதல்வர் கலைஞர் மூலம் எங்களுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. எனவே இந்த பட்டாவை அரசாங்க பதிவேட்டில் பதிவு செய்து மறுப்பட்டா வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

The post கிராம மக்கள் மனு முறையாக பட்டா வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Vengaikurichchi ,Maratchi Redtiyapatti ,Manapparai, Trichy district ,Dinakaran ,
× RELATED நள்ளிரவில் தீயில் கருகியதாக நாடகம்;...