×

முத்துப்பேட்டை வர்த்தகக் கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

 

முத்துப்பேட்டை,மார்ச் 11: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வர்த்தகக் கழகம் சார்பில் நேற்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மற்றும் செயற்குழு கூட்டம் தலைவர் நெய்னா முகமது தலைமையில் நடைபெற்றது. ஆலோசகர்கள் ராஜாராமன், ஆரோக்கிய அந்தோணி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர், முன்னதாக துணைச்செயலாளர் ராஜேஷ் கண்ணா வரவேற்று பேசினார்.

பொருளாளர் சுவாமிநாதன் நிதிநிலை அறிக்கை வசித்தார். சிறப்பு அழைப்பாளராக ஆசாத்நகர் ஜிம்மா பள்ளி இமாம் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து ரமலான் மாதத்தை முன்னிட்டு அனைவரும் ஒன்றாக அமர்ந்து இப்தார் நோன்பு திறந்தனர். இதில் துணைச் செயலாளர் சாகுல் ஹமீது, டிஎம்பி மேலாளர் உதவி மேலாளர் மணிகண்டன், செயற்குழு உறுப்பினர்கள் உட்பட ஏராளமான வியாபாரிகள் கலந்துக்கொண்டனர். முடிவில் துணைத்தலைவர் கிஷோர் நன்றி கூறினார்.

The post முத்துப்பேட்டை வர்த்தகக் கழகம் சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Iftar Lent Opening Ceremony ,Muthuppettai Trade Association ,Muthuppettai ,Iftar Lent Opening Ceremony and Executive Committee Meeting ,Muthuppettai Trade Corporation ,Thiruvarur District ,Neena Mohammad ,Rajaraman ,Arokiya Anthony Raja ,Muthuppettai Commercial Association ,Dinakaran ,
× RELATED மன்னார்குடி அருகே ரூ.30 ஆயிரம் மதிப்பிலான டிரான்ஸ்பார்மர் ஆயில் திருட்டு