×

உமா மகேசுவரனார் கலைக்கல்லூரி சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு மனித சங்கிலி

 

தஞ்சாவூர், மார்ச்10: தமிழ்வேள் உமா மகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரியில் உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மனித சங்கிலி நடைபெற்றது. கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தமிழவேள் உமா மகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரியில் உலக மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கல்லூரியின் செயலாளர் சுந்தர வதனம் முன்னிலையில் கல்லூரியின் முதல்வர் முனைவர் இராசாமணி தலைமையில் மாபெரும் மகளிர் விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது. தஞ்சாவூர் மாநகராட்சியின் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொ ண்டு மனித சங்கிலியைத் தொடங்கி வைத்தார்.

கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் நிறைவேற்றுக் கழக உறுப்பினர் செந்தமிழ்ச்செல்வன் வாழ்த்துரை வழங்கினார். வழக்கறிஞர் ரேவதி ராஜூ சிறப்புரையாற்றினர்.தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர்கள் கிருத்திகா, ஜெய்னம்பு பர்வீன் தொகுப்புரை வழங்கினர்.நிகழ்ச்சியைத் தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் தெய்வக் கன்னி, நூலகர் வேணி கிருஷ்ணபாரதி, தமிழ்த் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் மகேசுவரி, இயற்பியல் துறை உதவிப் பேராசிரியர் ரம்யா ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர்.

 

The post உமா மகேசுவரனார் கலைக்கல்லூரி சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு மனித சங்கிலி appeared first on Dinakaran.

Tags : Uma Maheswaranar Arts College ,Women's Day ,Thanjavur ,World Women's Day ,Tamilvel ,Uma Maheswaranar Karandhaik Arts College ,Tamilvel Uma Maheswaranar Karandhaik Arts College ,Karandhai ,Tamil Sangam.… ,
× RELATED பாலின பேதங்கள் ஒரு பார்வை