×

கூவத்தூர் அரசு பள்ளி ஆண்டு விழா

 

ஜெயங்கொண்டம் : அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் கூவத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இவ் விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தார். உதவி தலைமை ஆசிரியர் அன்பு சாந்தி முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினருமான சஞ்சீவிகுமார், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பிரிட்டோ ஜெகநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றி பல்வேறு போட்டிகளில் கலந்து கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

கணித பட்டதாரி ஆசிரியர் குருநாதன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பள்ளி மேலாண்மை குழு தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் கணித பட்டதாரி ஆசிரியர் ராமசாமி நன்றி கூறினார்.

The post கூவத்தூர் அரசு பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Koovathur Government School Annual Festival ,Koovathur ,Government High ,School ,Andimadam Union ,Ariyalur District ,Kalyanasundaram ,headmaster ,Anbu Shanthi… ,
× RELATED சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சர்வதேச புவி தின விழா