×

பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

சிவகங்கை, மார்ச் 11: சிவகங்கை தேவி பூதேவி சுந்தரராஜ பெருமாள் கோயில் வருடாபிஷேக விழாவை முன்னிட்டு திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக கோவில் வளாகத்தில் உற்சவ தெய்வங்களை சர்வ அலங்காரத்தில் எழுந்தருள செய்தனர். இதனை தொடர்ந்து பக்தர்கள் சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக எடுத்து வந்து சமர்ப்பித்தவுடன் மாலை மாற்று வைபவம் கன்னிகா தானம் புனல் அணிவித்தல் பட்டு வஸ்திரம் சாற்றுதல் வைபவங்கள், யாக பூஜைகள் நடைபெற்றன.பின்னர் மங்கள வாத்தியங்கள் ஒலிக்க, வேத மந்திரங்கள் முழங்க தேவி பூதேவி தேவியர்களுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்டு உதிரி புஷ்பங்களால் அர்ச்சனைகள் செய்து வாரணம் ஆயிரம் பூஜைகளும் மகா கற்பூர ஆராதனையும் காண்பிக்கப்பட்டன.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

The post பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் appeared first on Dinakaran.

Tags : Perumal temple ,Sivaganga ,Bhoodevi Sundararaja ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி