×

சாத்தூர் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கலெக்டரிடம் மனு

விருதுநகர், மார்ச் 11: விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் சாத்தூர் பெருமாள்பட்டி அருகே ஜெகவீராபுரம் கிராம மக்கள் அளித்த மனுவில், ஜெகவீராபுரம் கிராமத்தில் உள்ள நத்தம்புறம்போக்கு நிலத்தை பாலமுருகன் மற்றும் அவரது மனைவி செல்வி சேர்ந்து ஆக்கிரமித்துள்ளனர். ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி விஏஓ, ஆர்ஐ, தாசில்தார், காவல் நிலையத்திலும் புகார் அளித்தோம். காவல் நிலையத்தில் அழைத்து விசாரித்த போது ஆக்கிரமிப்பை அகற்றி விடுவதாக உறுதி அளித்தும், அவர்கள் ஆக்கிரமிப்பை அகற்றவில்லை. கலெக்டர் தலையிட்டு ஆக்கிரமிப்பை அகற்றி நத்தம் புறம்போக்கு நிலத்தை ஊரின் பொது காரியத்திற்கு பயன்படுத்த வேண்டுமென தெரிவித்துள்ளனர்.

The post சாத்தூர் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற கோரி கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Sattur ,Virudhunagar ,Jagaveerapuram ,Sattur Perumalpatti ,Virudhunagar Collector ,Balamurugan ,Selvi ,Nathampurambokku ,VAO ,Dinakaran ,
× RELATED உரிமையாளர், 8 ஆடுகள் வாகனம் மோதி சாவு