×

உடன்குடியில் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்

உடன்குடி, மார்ச் 11: தமிழ்நாடு அரசின் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம், உடன்குடி காலாங்குடியிருப்பு கிராம நிர்வாக அலுவலகத்தில் நடந்தது. முகாமில் விவசாய தொழிலாளர்களுக்கு புதிய உழவர் அட்டை, அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை பெறுவதற்கும், இறப்பு நிவாரணம் பெறுவதற்காகவும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறபட்டது. விஏஓ நடராஜன், பேரூராட்சி கவுன்சிலர் மும்தாஜ்பேகம் ஆகியோர் மனுக்களை பெற்றுக் கொண்டனர். இதில் கிராம உதவியாளர் சங்கரி, 3வது வார்டு திமுக செயலாளர் முகமது சலீம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

The post உடன்குடியில் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் appeared first on Dinakaran.

Tags : Udangudi Farmer Protection Scheme Special Camp ,Udangudi ,Tamil Nadu Government ,Farmer Protection Scheme ,Udangudi Kalangudiyiruppu Village Administrative Office ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூரிலிருந்து உடன்குடி, நாசரேத்திற்கு புதிய பஸ்கள் இயக்கம்