×

பெண் கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம்

பழநி, மார்ச் 11: பழநியில் பெண்ணை கொன்ற வழக்கில் கைதானவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது. பழநி டவுன், லட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ஜோசப் மனைவி காந்தி (50). அடிவாரத்தில் உள்ள தனியார் லாட்ஜில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 11ம் தேதி இவரை, பழநி அருகே பாலசமுத்திரத்தைச் சேர்ந்த ஆனந்தகுமார் (41) என்பவர் முன்விரோதம் காரணமாக படுகொலை செய்தார். இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த ஆனந்தகுமார் போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளார்.

இந்நிலையில் ஆனந்த குமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய திண்டுக்கல் எஸ்.பி பிரதீப், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இவரது பரிந்துரையின் பேரில் ஆனந்த குமாரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் சரவணன் உத்தரவிட்டார். இதன்படி நேற்று ஆனந்தகுமார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

The post பெண் கொலை வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் appeared first on Dinakaran.

Tags : Palani ,Joseph ,Gandhi ,Lakshmipuram, Palani Town ,Dinakaran ,
× RELATED சாமி தரிசனம் முடிந்து திரும்பியபோது கார்-பஸ் மோதி சிறுவன் உட்பட 3 பேர் பலி