- மருத்துவ முகாம்
- ஆலந்தூர்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- உத்கல் சங்கம் அப்பல்லோ மருத்துவமனை
- வோல்டாஸ் காலனி நலச் சங்கம்
- நங்கநல்லூர் செல்லம்மாள் மேல்நிலைப் பள்ளி
- 167வது வார்டு
- கவுன்சிலர்
- துர்கா…
- சிறப்பு மருத்துவ முகாம்
- தின மலர்
ஆலந்தூர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு உத்கல் அசோசியேஷன் அப்போலோ மருத்துவமனை மற்றும் வோல்டாஸ் காலனி நலச்சங்கம் போன்றவை இணைந்து நடத்தும் சிறப்பு மருத்துவ முகாம் நங்கநல்லூர் செல்லம்மாள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. முகாமிற்கு, 167வது வார்டு கவுன்சிலர் துர்கா தேவி நடராஜன் தலைமை வகித்தார். உத்கல் அமைப்பின் தலைவர் பபித்ரா மோகன்மாஜி, செயலாளர் பிரவாசாபட்டி முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் நடராஜன் வரவேற்றார். மருத்துவ முகாமை முன்னாள் எம்பி ஆர்.எஸ்.பாரதி தொடங்கி வைத்தார். பயனாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளை ஆலந்தூர் மண்டல குழு தலைவர் என். சந்திரன் வழங்கினார். இதயம், நரம்பியல் சிகிச்சை, சக்கரை வியாதி, கண்பார்வை குறைவு மற்றும் பொது நோய்க்கான சிகிச்சையும் இசிஜி, எக்கோ பரிசோதனையும் செய்யப்பட்டது.
The post சிறப்பு மருத்துவ முகாம் appeared first on Dinakaran.