- சிந்தாதிரிப்பேட்டை குடிசை மாற்று வாரியம்
- சென்னை
- தேவிகா
- ஜெகநாதபுரம் 2வது தளம்
- சேத்துப்பட்டு, சென்னை
- சிந்தாதிரிப்பேட்டை
- வினோத் குமார்
- தின மலர்
சென்னை: சிந்தாதிரிப்பேட்டை குடிசை மாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக ரூ.2.2 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை சேத்துப்பட்டு ஜெகநாதபுரம் 2வது ெதருவை சேர்ந்தவர் தேவிகா (40). இவர் சிந்தாதிரிப்பேட்டையில் வசித்த போது, வினோத்குமார் (32) என்பவர் அறிமுகமாகி உள்ளார். அப்போது சென்னை மாநகராட்சியில் பொறியாளராக வேலை செய்யும் நபர் மூலம் குடிசைமாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக கூறி உள்ளார். அதன்படி தேவிகா கடந்த 2023ம் ஆண்டு 2 தவணையாக வினோத்குமாரிடம் ரூ.2.2 லட்சம் பணம் கொடுத்துள்ளார். ஆனால், சொன்னபடி குடிசைமாற்று வாரியத்தில் அவர் வீடு வாங்கி கொடுக்கவில்லை.
இதையடுத்து கொடுத்த பணத்தை தேவிகா திரும்ப கேட்டுள்ளார். அற்கு வினோத் பணம் கொடுக்காமல் மிரட்டியதாக கூறப்படுகிறது. எனவே, இச்சம்பவம் குறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் தேவிகா புகார் அளித்தார். புகாரின்படி போலீசார் வங்கி ஆவணங்களை வைத்து விசாரணை நடத்திய போது, தேவிகாவிடம் ரூ.2.2 லட்சம் வினோத்குமார் பணம் பெற்றது உறுதியானது. மேலும், தேவிகா போன்று பலரிடம் வினோத்குமார் குடிசைமாற்று வாரியத்தில் வீடு வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதைதொடர்ந்து போலீசார் வினோத்குமார் மீது மோசடி உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் அதிரடியாக கைது செய்தனர்.
The post சிந்தாதிரிப்பேட்டை குடிசை மாற்றுவாரியத்தில் வீடு வாங்கி தருவதாக ரூ.2.2 லட்சம் மோசடி: வாலிபர் சிறையில் அடைப்பு appeared first on Dinakaran.
