×

கோயம்பேடு காய்கறி பூ, பழம், உணவு தானிய மார்க்கெட்டில் குவியும் குப்பை உடனடி அகற்றம்: அங்காடி நிர்வாகம் நடவடிக்கை; வியாபாரிகள் வரவேற்பு

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு காய்கறி, பூக்கள், பழம் ஆகிய மார்க்கெட்டுகளில் குவிந்துவரும் குப்பை கழிவுகளை சரிவர எடுக்காமல் தாமதம் செய்து வந்ததால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். இதனால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மார்க்கெட்டில் குவிந்து கிடக்கும் குப்பையை உடனுக்குடன் அகற்ற வேண்டும் என அங்காடி நிர்வாக அலுவலகத்திடம் வியாபாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து குப்பை கழிவுகளை சரிவர எடுக்காமல் தாமதம் செய்துவரும் பழைய ஒப்பந்ததாரர்களை நீக்கிவிட்டு சீனிவாச வேஸ்ட்மேனேஜ்மெட் என்ற புதிய ஒப்பந்ததாரரை நியமித்தனர்.

இந்த புதிய ஒப்பந்ததாரர் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் குவியும் குப்பையை உடனுக்குடன் அகற்ற மொத்தம் 250 பணியாகளர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குப்பை அள்ளும் வாகனங்கள் 10க்கும் மேற்பட்ட லாரிகள் மேலும் 3 பொக்லைன் இயந்திரம் உடனுக்குடன் அகற்ற இந்த பணிக்காக பயன்படுத்தப்பட்டும் வருகிறது. இதன் காரணமாக, கடையில் சேர்த்து வைக்கும் குப்பை கழிவுகளையும் சேகரித்து வருவதால் மார்க்கெட் சுத்தமாக உள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘கோயம்பேடு மார்க்கெட் முழுவதும் குவிந்துள்ள குப்பையை அகற்றவேண்டும் என கோரிக்கை வைத்தோம். இதையடுத்து அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி மார்க்கெட் பகுதியில் ஆய்வு செய்து குப்பையை உடனுக்குடன் அகற்றாமல் தாமதம் செய்துவந்த பழைய ஒப்பந்ததாரரை அப்புறப்படுத்திவிட்டு புதிய ஒப்பந்ததாரரை நியமித்து உடனுக்குடன் குப்பை அகற்றி வருகின்றனர். இதனால் மார்க்கெட் சுத்தமாக உள்ளது. இதற்காக அங்காடி நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.

அங்காடி நிர்வாகம் கூறுகையில், ‘‘மார்க்கெட்டில் குப்பை தேங்காதவாறு அகற்றும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மார்க்கெட்டில் ஏற்கனவே தேங்கிய குப்பை உடனுக்குடன் அகற்றப்பட்டது. மீண்டும் குப்பை குவிந்ததால் அதை அகற்றும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. குப்பை குவிந்து இருந்தால் அங்காடி நிர்வாகத்தை அணுகலாம். வியாபாரிகளின் குறைகள் உடனுக்குடன் சரிசெய்து தரப்படும்’’ என்றார்.

The post கோயம்பேடு காய்கறி பூ, பழம், உணவு தானிய மார்க்கெட்டில் குவியும் குப்பை உடனடி அகற்றம்: அங்காடி நிர்வாகம் நடவடிக்கை; வியாபாரிகள் வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : Koyambedu ,Annanagar ,Chennai ,Dinakaran ,
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்