ஈரோடு, மார்ச் 11: ஈரோடு மாநகராட்சியில் 2024-2025ம் நிதியாண்டிற்கான சொத்து வரி, காலியிட வரி உள்ளிட்ட வரியினங்களை 100 சதவீதம் வசூலிக்கும் வகையில் வார்டு வாரியாக சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் 2024-2025ம் நிதியாண்டிற்கான சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகள் மற்றும் கடந்த ஆண்டு வரை நிலுவையிலுள்ள வரிகளை வருகின்ற மார்ச் மாதம் 31ம் தேதிக்குள் வசூலிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, மாநகராட்சி அதிகாரிகள் வரி செலுத்துவது குறித்து ஒலிப்பெருக்கி மூலமும், வீடு, வீடாகச் சென்றும் அறிவுறுத்தி வருகின்றனர். குறிப்பாக, மாநகராட்சி உதவி வருவாய் அலுவலர்கள், வரி வசூல் அலுவலர்கள் வரி பாக்கி வைத்துள்ள நபர்களின் வீடுகளுக்கு வரி வசூலிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில், வரி பாக்கி வைத்துள்ளவர்கள் வீடுகளுக்கு செல்லும் அலுவலர்கள், வரிகளை செலுத்தக்கோரி நோட்டீஸ் வழங்கி, பாக்கி வரிகளை நிலுவையின்றி செலுத்த அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும், வரி வசூலிக்க மண்டல வாரியாக 400 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வரி வசூல் மையங்கள் உள்பட வரி வசூல் செய்யும் வகையில் நடமாடும் வாகனம் செயல்படுத்தப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில், மாநகராட்சியில் வரி வசூலிக்கும் பணியை மேலும் துரிதப்படுத்தும் வகையில், வார்டு வாரியாக 60 வார்டுகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பில் கலெக்டர்கள், ஊழியர்கள் வரி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் நேரிடையாக மக்களை சந்தித்து வரி வசூல் செய்தும், வரி தொகை செலுத்த தவறினால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் நீதிமன்றம் மூலம் ஜப்தி நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரித்தும் வருகின்றனர்.
The post வரியினங்களை 100 சதவீதம் வசூலிக்க வார்டு வாரியாக சிறப்பு முகாம் appeared first on Dinakaran.