- அருப்புக்கோட்டை
- தஞ்சாவூர்
- தூத்துக்குடி
- ராதாகிருஷ்ணன்
- நாமக்கல்
- காஞ்சநாயக்கன்பட்டி பிரிவு
- விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை...
அருப்புக்கோட்டை: தஞ்சாவூரில் இருந்து தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவ நிறுவனத்திற்கு நேற்று முன்தினம் இரவு காஸ் டேங்கர் லாரி புறப்பட்டு வந்தது. நாமக்கல்லை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (60), லாரியை ஓட்டி வந்தார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, கஞ்சநாயக்கன்பட்டி பிரிவில் காஸ் லாரியை சாலையோரம் நிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். திண்டுக்கல்லைச் சேர்ந்த செல்வம் (45) என்பவர் கொல்கத்தாவில் இருந்து அலங்கார பனை ஓலையை லாரியில் ஏற்றி தூத்துக்குடி சென்றுகொண்டிருந்தார்.
இந்த லாரி, நேற்று அதிகாலை 4 மணியளவில் காஸ் டேங்கர் லாரி மீது மோதியது. இதில் காஸ் டேங்கர் லாரியின் வால்வு உடைந்து காஸ் வெளியேறியது. தகவலறிந்து அருப்புக்கோட்டை தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று, நீரை பீய்ச்சியடித்தனர். மருத்துவ காஸ் என்பதால் இதனால் யாருக்கும் பாதிப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post காஸ் டேங்கர் மீது லாரி மோதி விபத்து: காஸ் வெளியேறியதால் பரபரப்பு appeared first on Dinakaran.