×

கடல் கடந்த காதல் கல்யாணத்தில் முடிந்தது காரைக்குடி மருமகளானார் போர்ச்சுக்கல் நாட்டுப்பெண்

காரைக்குடி: காரைக்குடியில் போர்ச்சுக்கல் பெண்ணுக்கு, தமிழக கலாச்சாரப்படி திருமணம் நடந்தது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, வஉசி ரோடு பகுதியை சேர்ந்தவர் சுப்பு. இவர் அயர்லாந்து நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது கம்பெனியில் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த மரிசா லாப்ஸ் பணியாற்றி வந்தார். 3 ஆண்டுகளுக்கு முன் யோகா நிகழ்ச்சியில் சந்தித்த இவர்களுக்குள் காதல் மலர்ந்துள்ளது. இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்களும் சம்மதித்தனர். சுப்புவின் சொந்த ஊரான காரைக்குடியில் தமிழக கலாச்சாரப்படி திருமணம் நடக்க வேண்டும் என மணப்பெண் வீட்டார் ஆசைப்பட்டுள்ளனர். இதன்படி நேற்று காதல் ஜோடிகளுக்கு காரைக்குடியில் தமிழக கலாச்சாரப்படி திருமணம் நடந்தது.

மணமகன் சுப்பு கூறுகையில், ‘‘நாங்கள் இருவரும் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தோம். 2 ஆண்டுகளுக்கு முன் மரிசா லாப்ஸை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தேன். அப்போது தமிழக பெண்கள் சேலை அணிவது மற்றும் கலாச்சாரம் மிகவும் சிறப்பாக உள்ளதால் காரைக்குடியில் தான் திருமணம் செய்ய வேண்டும் என தெரிவித்தார். அவரது விருப்பபடி திருமணத்தை நடத்தி உள்ளோம்’’ என்றார். மணமகள் மரிசா லாப்ஸ் கூறுகையில், ‘‘தமிழ்நாட்டு கலாச்சாரம் மிகவும் சிறப்பாக உள்ளது. தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் நடந்தது மகிழ்ச்சி’’ என்றார்.

The post கடல் கடந்த காதல் கல்யாணத்தில் முடிந்தது காரைக்குடி மருமகளானார் போர்ச்சுக்கல் நாட்டுப்பெண் appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Tamil Nadu ,Subbu ,Karaikudi, VOC Road ,Sivaganga district ,Ireland ,Marisa ,Portugal ,
× RELATED அதிமுக-பாஜ கூட்டணி துப்பாக்கி...