- ராமதாஸ்
- திண்டிவனத்தில்
- பா.ம.க.
- தைலாபுரம்
- விழுப்புரம் மாவட்டம்
- ஜனாதிபதி
- அன்புமணி
- ஜி.கே.மணி
- ஏ.கே. மூர்த்தி
- பொருளாளர்
- திலகா…
- தின மலர்
திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பாமக சார்பில் 2025-2026ம் ஆண்டுக்கான பொது நிழல் நிதிநிலை அறிக்கை நேற்று காலை வெளியிடப்பட்டது. இதனை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். இதில், தலைவர் அன்புமணி, ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, பொருளாளர் திலக பாமா, பு.த.அருள்மொழி, வடிவேல்ராவணன், எம்எல்ஏக்கள் சிவக்குமார், அருள், சதாசிவம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பாமக நிழல் நிதிநிலை அறிக்கையின்படி 2025-26ம் நிதியாண்டில் தமிழ்நாட்டின் வருவாய் ரூ.5,43,442 கோடியாகவும், மொத்த செலவினம் ரூ.5,68,978 கோடியாகவும், ரூ.46,339 கோடி வருவாய் உபரியை கொண்டு இருக்கும். நிதிப்பற்றாக்குறை ரூ.25,536 கோடியாக இருக்கும். ரூ.71,855 கோடிக்கு மூலதன செலவுகள் செய்யப்படும்.
அடுத்த 4 ஆண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசு வேலை, அடுத்த 5 ஆண்டுகளில் 80 சதவீத இட ஒதுக்கீடின்படி 1 கோடி பேருக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு கிடைக்கும். கல்வி, மருத்துவத்திற்கு 6 விழுக்காடு நிதி, வேளாண்துறைக்கு ரூ.65 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி, மருத்துவம், விவசாயத்திற்கு மொத்த செலவில் மூன்றில் ஒரு பங்கை ஒதுக்கீடு செய்யவேண்டும். மே 1ம் தேதி முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்படும். இரு மொழிக் கொள்கை தொடரும். தொகுதிக்கு ஒரு அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும். தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும். ரூ.318க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். டி.என்.பி.எஸ்சி-க்கு நிலையான தேர்வு அட்டவணை உருவாக்கப்படும்.
பேருந்து கட்டணம் உயர்த்தப்படமாட்டாது. கோயம்பேடு பேருந்து முனையம் பூங்காவாக மாற்றப்படும். கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ ரயில் சேவை கொண்டுவரப்படும். மேகதாது அணை கட்டுவது தடுக்கப்படும். வேளாண்மைத்துறைக்கு ரூ.65,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மின் கட்டணம் மாதாமாதம் கணக்கீடு செய்யப்படும். கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு 90 சதவீத மானியத்தில் மடிகணினி வழங்கப்படும் என்று ராமதாஸ் தெரிவித்தார். பின்னர் அன்புமணி அளித்த பேட்டியில், தமிழத்தில் மாநில பாடத்திட்ட பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பயிற்று மொழியாக சட்டமாக்க வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இடஒதுகீட்டின் பயன்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
The post 2025-26ம் ஆண்டுக்கான பாமக பொது நிழல் நிதிநிலை அறிக்கை: ராமதாஸ் வெளியிட்டார்: வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.5,000 appeared first on Dinakaran.
