×

நடப்பு நிதியாண்டில் ரூ.51,463 கோடிக்கு துணை மானிய கோரிக்கை: மக்களவையில் தாக்கல்

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் அரசுக்கு கூடுதலாக ரூ.51,463கோடி செலவிடுவதற்காக மக்களவையில் துணை மானிய கோரிக்கை கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் மாதத்துடன் முடிவடையும் நடப்பு நிதியாண்டில் கூடுதலாக ரூ.51,462 கோடியை செலவிடுவதற்கு அரசு நேற்று நாடாளுமன்றத்தின் ஒப்புதலை கோரியுள்ளது.

மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இரண்டாவது துணை மானிய கோரிக்கையின் படி, நடப்பு நிதியாண்டில் அரசின் நிகர கூடுதல் செலவு ரூ.51,462.86கோடியாக இருக்கும். கூடுதல் செலவில் உர மானியத்துக்காக ரூ.12,000கோடியும், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் உட்பட அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்திற்காக ரூ.13,449 கோடியும் அடங்கும்.மொத்த செலவினத்தில் தொலைத்தொடர்பு துறைக்கு ரூ.5332 கோடியும் அடங்கும்.

The post நடப்பு நிதியாண்டில் ரூ.51,463 கோடிக்கு துணை மானிய கோரிக்கை: மக்களவையில் தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,New Delhi ,Parliament ,Lok ,Sabha ,Dinakaran ,
× RELATED நான் எதற்கும் தயார்; உண்மையை,...