×

நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு நிதி தேவை; தொழில் துறையினர் வரி குறைப்பு கோரக்கூடாது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அறிவுரை

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் கட்கரி பேசுகையில்,‘‘ஜிஎஸ்டி மற்றும் வரிகளைக் தொழில்துறையினர் குறைக்கக் கோரிக்கை விடுக்கக்கூடாது. இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. நாங்கள் வரியைக் குறைத்தால்,நீங்கள் இன்னும் அதிகமாகக் கேட்பீர்கள், இது மனித உளவியல்.

நாங்கள் வரியைக் குறைக்க விரும்புகிறோம். ஆனால் வரி விதிக்காமல், அரசாங்கம் ஒரு மக்கள் நலன்சார்ந்த அரசை நடத்த முடியாது. பணக்காரர்களிடமிருந்து வரியைப் பெற்று ஏழைகளுக்கு சலுகைகளை வழங்குவதே அரசின் தொலைநோக்குப் பார்வை. அரசாங்கத்திற்கு என அதன் வரம்புகள் உள்ளன. தற்போது இந்தியாவின் தளவாடச் செலவு 14-16 சதவீதமாக உள்ளது ’’ என்றார்.

The post நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு நிதி தேவை; தொழில் துறையினர் வரி குறைப்பு கோரக்கூடாது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Nitin Gadkari ,New Delhi ,Delhi ,Gadkari ,Union Minister Nitin Gadkari ,Dinakaran ,
× RELATED ரூ.85 லட்சம் கோடி திட்டங்கள் தேக்கம்...