சென்னை: பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு, நிதி உதவிகளை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பேரறிஞர் அண்ணா கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நல வாரியத்தின் விதிகளை திருத்தி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. விபத்து மரணம் அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடு ரூ.2.50 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இரண்டு குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை 25000ல் இருந்து 50000 உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு பெண் குழந்தைக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ. 60,000 ஆக அதிகரித்துள்ளது. ஈமச்சடங்கு உதவித் தொகையை ரூ.5,000லிருந்து ரூ.25,000ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
உறுப்பினரின் குழந்தைகள் அவர்கள் வேலை செய்யும் வரை அல்லது திருமணம் செய்து கொள்ளும் வரை அல்லது 25 வயது அடையும் வரை மற்றும் உறுப்பினரைச் சார்ந்து இருக்கும்.
The post பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு, நிதி உதவிகளை உயர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவு appeared first on Dinakaran.