- விஜயசாந்தி
- காங்கிரஸ்
- தெலுங்கானா தேர்தல்
- எம்.எல்.சி.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
- கட்வால்
- தெலுங்கானா சட்டசபை தேர்தல்
- இ. கம்யூனிஸ்ட் கட்சி
- முதல் அமைச்சர்
- ரேவந்த் ரெட்டி
- தெலுங்கானா
- தின மலர்
கட்வால்: தெலங்கானா பேரவை தேர்தலின் போது காங்கிரசில் சேர்ந்த நடிகை விஜயசாந்திக்கு தற்போது எம்எல்சி ‘சீட்’ ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் கூட்டணி கட்சியான இ.கம்யூ கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. அம்மாநிலத்தில் 5 சட்டமன்ற மேலவை உறுப்பினர் (எம்எல்சி) பதவிக்கான தேர்தல் வரும் 20ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தனது வேட்பாளர்கள் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அந்தப் பட்டியலில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அடங்கி தயாகர், கேதாவத் சங்கர் நாயக், நடிகையான விஜயசாந்தி ஆகியோர் கட்சியின் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு இடத்திற்கான வேட்பாளராக கூட்டணி கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு (சிபிஐ) ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் எம்எல்சி பதவிக்கு போட்டியிடும் 3 வேட்பாளர்களில் அடங்கி தயாகர் என்பவர், தெலங்கானா தனி மாநில போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்றவர் ஆவார். அடுத்ததாக கேதாவத் சங்கர் நாயக் என்பவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவராவார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நடிகை விஜயசாந்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. முன்னாள் எம்பியான இவர், தெலங்கானா தனிமாநில போராட்டத்திலும் பங்கேற்றவர் ஆவார்.
காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு முன்னர் பாஜக, டிஆர்எஸ் போன்ற கட்சிகளிலும் விஜயசாந்தி இருந்தார். காங்கிரசில் சேருவதற்கு முன்பு தனக்கு எம்எல்சி பதவியை வழங்க வேண்டும் என்று அப்போதைய அகில இந்திய காங்கிரஸ் மாநிலப் பொறுப்பாளரான தாக்கரேவிடம் விஜயசாந்தி கோரிக்கை விடுத்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தற்போது விஜயசாந்திக்கு எம்எல்சி பதவி கிடைக்கவுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்து எம்எல்சி சீட் கேட்டதாகக் கூறப்படுகிறது. தேர்தல் நடைபெறவுள்ள 5 எம்எல்சி பதவிக்கான இடங்களில், காங்கிரஸ் 3 இடங்களையும், கூட்டணி கட்சியான இ.கம்யூ கட்சி ஒரு இடத்தையும் பெற வாய்ப்புள்ளது. மீதமுள்ள ஒரு இடத்தை பாஜக பெறவாய்ப்புள்ளது.
The post தெலங்கானா தேர்தலின்போது காங்கிரசில் சேர்ந்த நடிகை விஜயசாந்திக்கு எம்எல்சி ‘சீட்’: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு appeared first on Dinakaran.