×

“தமிழ் மக்களை தர்மேந்திர பிரதான் அவமதித்துள்ளார்”: அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை : தமிழ் மக்களை தர்மேந்திர பிரதான் அவமதித்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மக்களவையில் ‘தமிழ்நாடு எம்.பி.க்கள் நாகரிகமற்றவர்கள்” என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் இவ்வாறு தெரிவித்தார். மேலும், “அவர்கள் மனதில் இருப்பது வெளியே வந்துள்ளது. தமிழ்நாட்டு மக்களை எப்படி பார்க்கிறார்கள் என்பதற்கு தர்மேந்திர பிரதானின் பேச்சே சான்று. நமது எம்.பி.க்களை அவமதிப்பது, ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதிக்கும் செயல்தான்,”இவ்வாறு குறிப்பிட்டார்.

The post “தமிழ் மக்களை தர்மேந்திர பிரதான் அவமதித்துள்ளார்”: அமைச்சர் அன்பில் மகேஷ் appeared first on Dinakaran.

Tags : Dharmendra Pradhan ,Minister ,Anbil Mahesh ,Chennai ,Union Minister ,Lok Sabha ,Tamil Nadu ,
× RELATED கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்: அமைச்சர் அறிவுறுத்தல்