- பட்ஜெட் கூட்டம்
- புதுச்சேரி சட்டமன்றம்
- புதுச்சேரி
- புதுச்சேரி சட்டமன்றம்
- முதல் அமைச்சர்
- ரங்கசாமி
- புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டம்
- கவர்னர்
- தின மலர்
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணை நிலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. பட்ஜெட் கூட்டத் தொடர் மார்ச் 28ம் தேதி வரை நடைபெறும். 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டினை முதல்வர் ரங்கசாமி நாளை மறுநாள் புதுச்சேரி சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் தொடங்கியுள்ள நிலையில், பேரவைக்கு வருகை தந்த துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதனுக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டு முதல்வர் ரங்கசாமி வரவேற்றார்.
12ம் தேதி முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். 15வது புதுச்சேரி சட்டப்பேரவையின் 5வது கூட்டத்தொடர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 31ம் தேதி கூட்டப்பட்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. துணை நிலை ஆளுநர் உரையுடன் துவங்கிய இக்கூட்டம் 11 நாட்கள் நடைபெற்றது. தொடர்ந்து பிப்ரவரி மாதம் 12ம் தேதி சட்டசபை மீண்டும் கூட்டப்பட்டு ரூ.700.25 கோடிக்கு கூடுதல் செலவினங்களுக்கு அனுமதி பெறப்பட்டது.
அத்துடன் சட்டசபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இதற்கிடையே 15வது சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணிக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கியது. நாளை 11ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது எம்எல்ஏக்கள் பேசுகின்றனர்.12ம் தேதி 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டினை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்கிறார்.
The post புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணை நிலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது appeared first on Dinakaran.