- உதவி எண்.
- உலக மகளிர் தினம்
- பெரம்பலூர்
- ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல்
- அழைக்கப்பட்டது
- JCI
- மகளிர் உதவி எண்.
- தின மலர்
பெரம்பலூர், மார்ச் 10: ஜேசிஐ எனப்படும் ஜூனியர் சேம்பர் இன்டர் நேஷனல் என்பது, 18 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களை கொண்ட ஒரு இலாப நோக்கற்ற சர்வதேச அமைப்பாகும். இது சுருக்கமாக ஜேசிஐ (JCI) என அழைக்கப் படுகிறது. ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் (ஜேசிஐ) அமைப்பின்மூலம் இளம் தலைவர்களுக்கு வழி முறைகளை வழங்குவது, இளம் தலைவர்களுக்கு திறன் மேம்பாட்டு வாய்ப்புகளை வழங்குவது, இளம் தலைவர்களுக்கு சமூக மாற்றத்தை ஏற்படுத்த உதவுவதே ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் (ஜேசிஐ) அமைப்பின் செயல் பாடுகளாகும்.
இந்த ஜேசிபி அமைப்பின் பெரம்பலூர் தலைவர் கனகமணி, செய லாளர் வழக்கறிஞர் கரு. அய்யம் பெருமாள், பொருளாளர் நாகரசன், ஜேசிஐ பொறுப் பாளர்கள் பாரதிராஜா, மணிகண்டன், வினோத் கண்ணன் உள்ளிட்டோர் உலக மகளிர் தினத்தை முன்னிட்டுபெர ம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களில், காவல் நிலையங்களில் மகளிர் உதவி எண் 181 ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பெரம்பலூர் மாவட்ட சமூக நல அலுவலர் ஜெய மற்றும் அவரது அலுவல கத்தில் பணிபுரியும் மகளிர்கள் அனைவரையும் சந்தித்து மகளிர் தின வாழ்த்துக்களைக் கூறி, இனிப்புகள் வழங்கப் பட்டது. பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ் பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் அங்கிருந்த அனைத்து பெண் காவலர்கள்அனை வருக்கும் இனிப்புகள் வழங்கி, மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. மேலும் பெரம்பலூர் புது பஸ்டாண்டு பகுதியில் நகராட்சி நிர்வாகத்தின் கீழ் இயங்கிவரும் அம்மா உணவகத்தில்பணிபுரியும் மகளிர் அனைவரையும் சந்தித்து இனிப்புகள் வழங்கி மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவிக்கப் பட்டது.
தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் ஊழியர்கள் ஆகியோரிடம் மகளிர் உதவி எண் 181 குறித்து விளக்கிக்கூறியும், ஸ்டிக்கர் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
The post உலக மகளிர் தினத்தையொட்டி அரசு அலுவலகங்களில் மகளிர் உதவி எண் 181 ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு appeared first on Dinakaran.