×

பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலை. விரிவாக்க மையத்தில் தேசிய அறிவியல் தினம் கருத்தரங்கம்

பெரம்பலூர்,மார்ச் 10: பெரம்பலூரில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழக முதுகலை விரிவாக்க மையத்தில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி ஒரு நாள் கருத்தரங்கம் நடை பெற்றது. பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தண்ணீர் பந்தல் பகுதியில் அரசு தொழில் பயிற்சி நிறுவனம் அருகே இயங்கி வரும், பாரதிதாசன் பல்கலைக் கழக முதுகலை விரிவாக்க மையத்தில், கணினி அறிவியல் துறையின் சார்பாக, தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு ஒரு நாள் கருத்தரங்கு நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், பாரதி தாசன் பல்கலைக் கழக முதுகலை விரிவாக்க மையத்தின் இயக்குனர் மாலதி தலைமை வகித்து பேசினார். பேராசிரியர் திருமுருகன் வரவேற்றார். வேப்பந்தட்டை அரசு கலை அறிவியல் கல்லூரியின் வணிக மேலாண்மைத் துறையின் துறைத் தலைவர் சத்தியசீலன் கலந்து கொண்டு சிறப்புரை பேசினார். இந்தக் கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவ- மாணவியர், இதர கல்லூரி மாணவ- மாணவியர், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியை ராஜலட்சுமி நன்றி கூறினார்.

The post பெரம்பலூர் பாரதிதாசன் பல்கலை. விரிவாக்க மையத்தில் தேசிய அறிவியல் தினம் கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : Perambalur Bharathidasan University ,National Science Day Seminar ,Perambalur ,Bharathidasan ,University ,Postgraduate Extension Center ,National Science Day ,Government Vocational Training Institute ,Taner Pandal ,Trichy-Chennai National Highway ,Perambalur… ,Extension ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் நாய்கள்,...